
தமிழகம் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் மக்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும் கோயிலுக்கு வரும் சில ஆண் பக்தர்கள் டிரவுசர், டிராக் பேண்ட், பெண் பக்தர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டாப், லெக்கின்ஸ் உள்ளிட்ட ஆடைகளில் வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தடுக்க பல நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் இருக்கும் முசாபர்நகரில் உள்ள பாலாஜி தாம் கோவிலில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் அரை பேண்ட், மினி ஸ்கர்ட் போன்ற குட்டையான ஆடைகளை அணிந்தவர்கள் குலதெய்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தியாவுக்கு வருகை தரும் ரொனால்டோ…, ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!!
அப்படி குட்டையான ஆடைகளை அவர்கள் அணிந்து வருவதால் குலதெய்வ தரிசனத்திற்கு வரும் மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்கிறது. இதனால் பெண்களுக்கு இந்த ஆடை கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.