ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது – விஸ்வரூபம் எடுக்கும் கருப்பு பூஞ்சை நோய்!!

0
Portrait an unknown male doctor holding a stethoscope behind

கொரோனா தாக்கத்தை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. கோவிட் -19 லிருந்து மீண்டவர்களுக்கு அதிகளவில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் கருப்பு பூஞ்சை நோய்:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவத்தினால் தினசரி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் மேலும் ஓர் கொடிய வகை கருப்பு பூஞ்சை என்னும் நோய் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த வகை நோய் தமிழகம், மராட்டியம், உபி போன்ற பல மாநிலங்களில் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் காணப்படும். முகம் வீங்கி முகத்தில் அதிகமான வலி காணப்படும். பார்வை குறைபாடு ஏற்படுவதோடு பார்வை தெளிவாக இல்லாமல் அனைத்தும் இரட்டையாக தெரிவதும் இதற்கான அறிகுறிகள் தான். கருப்பு பூஞ்சை காற்று, தண்ணீர், ஈரமான இடங்கள் மூலமாக பரவுகிறது. கருப்பு பூஞ்சை பாதிப்பில் இருந்து தப்பிக்க தூசி மற்றும் ஈரமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here