கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பூர்ணிமா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பூர்ணிமா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைய (ஜனவரி 5) நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.16 லட்சம் தொகையுடன் பூர்ணிமா ரவி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். இந்த நிலையில் அவர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பூர்ணிமா மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு சிறிது நேரம் சோகமாக அமர்ந்திருந்தனர். தற்போது அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு குறித்து ‘மேடம் இது ஆக்சன் மேடம்’ என்றும், மறுபக்கம் ‘நல்ல குணம் பூர்ணிமா உண்மையிலேயே பாராட்டத்தக்கது’ என நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குழப்பம்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here