தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குழப்பம்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குழப்பம்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட உள்ளது. மேலும் இதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்க பணமும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதை கண்காணிக்க ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதை உடனடியாக 1967, 1800 425 5901 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here