விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ல் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும் இந்த வாரம் பிரதீப், மணி, ஜோவிகா, விஷ்ணு, கூல் சுரேஷ், மாயா, நிக்சன், வினுஷா, அக்ஷயா, யுகேந்திரன் மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் வெளியேற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 நான்காவது வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்று வினுஷா வெளியேற போவதாக 80 சதவீதம் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸிடம் வீட்டுக்கு போக வேண்டும் அழுது புலம்பியது குறிப்பிடத்தக்கது.