நாடு முழுவதும் ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப இந்தியன் ரயில்வே பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இப்போது ஒரு சூப்பரான அப்டேட்டை தெரிவித்துள்ளனர். அதாவது இந்தியன் ரயில்வேயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக எடுக்கும் வசதி பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதைத்தொடர்ந்து பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்தபடி முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை ஆன்லைனில் எடுப்பதற்கான வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது இன்று முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.