நாயகன் மீண்டும் வரார்.. 2 வருடங்களை நிறைவு செய்த ‘விக்ரம்’ திரைப்படம்!!

0
நாயகன் மீண்டும் வரார்.. 2 வருடங்களை நிறைவு செய்த ‘விக்ரம்’ திரைப்படம்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் இவருடன் சேர்ந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நேரங்களில் உணவு ஆர்டர் செய்யாதீர்.. Zomato வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மேலும் அவரின் சினிமா கேரியரில் தவிர்க்க முடியாத படங்களின் லிஸ்டில் இப்படமும் இடம்பெறும். அதுமட்டுமின்றி ஆக்சன், ரொமான்ஸ் போன்ற காட்சிகளுக்கு ஏற்ப அனிருத்தின்  பின்னணி இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 2 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதை கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here