ஹேமாவை கண்ணம்மாவுடன் மகிழ்ச்சியாக அனுப்பும் பாரதி.. மறுக்கும் சௌந்தர்யா – இன்றைய பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மாவில் தற்போது தான் ஒவ்வொரு உண்மையாக பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் தெரிய வருகிறது. மேலும் ஹேமாவை தன்னிடம் ஒப்படைக்க 4 நாள் கெடுவும் சௌந்தர்யாவுக்கு கொடுத்துள்ளார்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் பாரதி லட்சுமிக்கும் ஹேமாவுக்கும் ஒரே மாதிரி எடுத்த புது டிரஸ்ஸை போட்டு பாரதியிடம் ஹேமா காட்டி கொண்டுள்ளார். மேலும் லட்சுமி இந்த டிரஸ்ஸில் பாட்டி மாதிரியே இருப்பாள் என்று சொல்ல பாரதிக்கு டென்ஷன் தலைக்கேறுகிறது.

அதே சமயம் கண்ணம்மா ஹேமாவை கோவிலுக்கு அழைத்து செல்ல வருகிறார். ஆனால் இது பாரதிக்கு தெரிந்தால் கோவப்படுவான் என குடும்பமே மறுக்கிறது. அப்பொழுது தான் ஹேமாவும் பாரதியும் அங்கு வருகின்றனர்.

மேலும் நீ, நான், லட்சுமி கோவிலுக்கு செல்வதாக கண்ணம்மா ஹேமாவிடம் சொல்கிறார். அதற்கு ஹேமா அப்பா பெர்மிஷன் கொடுக்கணுமே என இழுக்க சௌதர்யாவே முந்திக்கொண்டு கோவிலுக்கெல்லாம் செல்லவேண்டாம் என சொல்ல பாரதி குழம்புகிறார்.

ஆனால் அத்திப்பூத்தாற் போல் பாரதி சிரித்துக்கொண்டே கோவிலுக்கு போயிட்டு வருமாறு சொல்கிறார். லட்சுமி அப்போது அங்கு வர இருவரும் ஒரே டிரஸ் அணிந்து இருப்பதை பார்த்து பாரதி உட்பட அனைவரும் சந்தோசபடுகின்றனர்.

பின்னர் ஹேமா, லட்சுமி, கண்ணம்மா மூவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே கோவிலுக்கு செல்கின்றனர். மேலும் இப்போ ஏன் திடிர்ன்னு கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்க என ஹேமா கேக்க நீயும் என் பொண்ணு தான். நீ லட்சுமி ஓட ப்ரன்ட். அவ என்ன அம்மான்னு கூப்டுறா.. நீ என்ன சமையல் அம்மான்னு கூப்டுற அது போதாதா என சொல்கிறார்.

அதை தொடர்ந்து சௌந்தர்யாவும் வேணுவும் நடப்பதை எல்லாம் பார்த்து பாரதிக்கு எந்த சந்தேகமும் வராமல் இருக்கவேண்டும் என பேசிக்கொண்டிருக்கின்றனர். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here