சௌந்தர்யாவை கைது செய்யும் போலீஸ்… அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் – இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!!

0

பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மாவை ஏமாற்றியது வெண்பா என்று தெரிந்த பின் சௌந்தர்யா வெண்பா வீட்டிற்கு செல்கிறார். அப்பொழுது தான் ஒரு பரபரப்பு சம்பவம் ஏற்படுகிறது.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் கண்ணம்மா தன்னை இவ்வளவு நாள் ஏமாற்றியது வெண்பா என்று சொன்னதும் சௌந்தர்யா ஆத்திரப்பட்டு வெண்பா வீட்டிற்கு செல்கிறார். மேலும் செல்லும்போதே காவல் துறைக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொல்ற வீட்டில் ஒரு கொலை நடக்கும். சீக்கிரம் வாருங்கள் என காவல் துறைக்கு தகவல் அளிக்கிறார்.

   அதை தொடர்ந்து வெண்பா வீட்டில் சௌந்தர்யா துப்பாக்கியை எடுத்து உனக்கு ஆரம்பத்திலேயே முடிவு கட்டிற்கனும் என்று சொல்ல ஆரம்பத்தில் பயந்த வெண்பா பின்னர் பாரதிக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று சௌந்தர்யாவிடமே மல்லு கட்டுகிறார்.

ஆனால் சௌந்தர்யா விடாமல் வெண்பாவை சோபாவில் தள்ளி துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். வெண்பாவும் மயங்கிவிட கண்ணம்மாவும் போலீஸ்வும் சம்பவ இடத்திற்கு வந்து விடுகின்றனர். சௌந்தர்யாவை கைது செய்து அழைக்கும் போது அவ்வளவு நேரம் செத்தது போல் நடித்த வெண்பா கன் எடுத்து  சௌந்தர்யாவை சுட கண்ணம்மா இடையே வந்து விடுகிறார்.

ஆனால் அப்பொழுது தான் இது எல்லாம் கண்ணம்மா காணும் கனவு என்று தெரிகிறது. இதனால் கண்ணம்மா ஏதோ சொல்லி சௌந்தர்யாவை திசை திருப்பி விட்டு ஹேமாவை பார்க்க கிளம்புகிறார். ஆனால் அதற்குள் சௌந்தர்யா பாரதியையும் ஹேமாவையும் வீட்டை விட்டு கிளப்பும் படி சொல்கிறார்.

ஆனால் அதற்குள் கண்ணம்மா பாரதி வீட்டுக்கு வந்து விடுகிறார். கண்ணம்மா ஹேமா தன் குழந்தை என்று சொல்லுவாரா என்று இனி வரும் எபிசோடுகளில் காணலாம். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here