பீஸ்ட் வசூல் குறையக் கூடாது – சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! நோ சொன்ன தளபதி!!

0

பீஸ்ட் படத்தின் வசூல் குறைய கூடாது என்பதற்காக, சன் பிக்சர்ஸ் எடுத்த முடிவுக்கு, நடிகர் விஜய் மறுப்பு சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 13ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியிருக்கிறது.

Beast Vs KGF: மல்லுக்கட்டி நாறும் ரசிகர்கள்., மோதல் குறித்து ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ யாஷின் அதிரடி பதில்!!

இந்த நிலையில், கேஜிஎப் 2 படத்துடன் பீஸ்ட் படம் மோத உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று விஜய்யிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், நடிகர் விஜய் அதற்கு நோ சொல்லிவிட்டார்.

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த, அண்ணாத்த மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடாததால், நிறுவனம் இந்த முடிவுக்கு வந்ததாக பேசப்படுகிறது. ஆனால் விஜய் இதற்கு நோ சொல்லி விட்டதால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் இவருக்கும் இடையே ஒரு மோதல் வெடித்துள்ளதாக பேசப்படுகிறது. தற்போது, இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here