வங்கி வாடிக்கையாளர்களே.., இந்த 4 நாள் பேங்க் பக்கம் போகாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை குறித்த ஒவ்வொரு மாதமும் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இதைத்தொடர்ந்து இம்மாத இறுதியில் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளை முன் கூட்டியே செய்து கொள்ளும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது/இதைத்தொடர்ந்து 30ம் தேதி மாதத்தின் நான்காவது வார சனிக்கிழமை வருகிறது. 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1ம் தேதி இறுதி ஆண்டுக்கான கணக்குகள் முடிக்கப்படும். இதன் காரணமாக அன்று வங்கிகள் திறந்து இருக்கும். ஆனால் பொது மக்களுக்கான சேவைகள் கிடையாது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here