இனி இட்லி தோசைக்கு ஊரே மணக்கும் வாழைப்பூ சட்னி.., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை தாறுமாறா இருக்கும்!!

0
இனி இட்லி தோசைக்கு ஊரே மணக்கும் வாழைப்பூ சட்னி.., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை தாறுமாறா இருக்கும்!!
பொதுவாக நம்முடைய வீட்டில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னியை தான் செய்து தான் சாப்பிட்டு வந்திருப்போம். ஆனால் இப்போது கொஞ்சம் புதிதாக வாழைப்பூவை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
  • வாழைப்பூ  – 1
  • கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
  • தேங்காய் – 1 கப்
  • சின்ன வெங்காயம்  – 200 கிராம்
  • மல்லி விதை – `1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • வர மிளகாய்  – 6
  • நல்லெண்ணெய் – 3  டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

செய்முறை விளக்கம்:

சட்னி தயாரிப்பதற்கு வாழைப்பூவை நரம்பு நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சேர்த்து நன்றாக வறுக்கவும். பின்னர் அதில் மிளகாய் வத்தல், மல்லி விதை, சீரகம் சேர்த்து நன்றாக வறுக்கவும். பின்னர் அதோடு ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

இவை அனைத்தும் நன்றாக வறுபட்டவுடன் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இப்போது அதே கடாயில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை போட்டு அதோடவே 200 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் தேங்காய் துருவல் மற்றும் ஒரு நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து வதக்கவும். இவற்றையெல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இப்போது நமக்கு சுவையான வாழைப்பூ சட்னி கிடைக்கும்.

Enewz Tamil WhatsApp Channel 

யு.ஜி.சி. நெட் தேர்வர்களுக்கு நற்செய்தி., நாளை (டிச.14) இந்த இடங்களில் மறு தேர்வு., தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here