கோபி செய்த காரியத்தால் வேதனை அடையும் பாக்கியா…!ஆறுதல் சொல்லும் எழில்,ஜெனி !!!

0

இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்று டாப் டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்யலக்ஷ்மி. இந்த சீரியலில் இன்றைய கதையில், ஹாஸ்பிடலுக்கு பாக்கியாவை கூப்பிட்டு செல்லும் கோபி, தனது கால் பற்றி டாக்டர் என்ன சொன்னார்கள் என்று  ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இதனால் மிகுந்த வேதனை அடைகிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவிடம் தனது வேதனையை  சொல்லி அவரின் அனுதாபத்தை பெறுகிறார் கோபி. இன்றைய கதையில், கோபி ஆபீஸ் கிளம்புவதாக கூறி ராதிகா உடன் கோர்ட்டுக்கு செல்ல திட்டமிடுகிறார்.

இந்நிலையில் கோபியின் அப்பா மற்றும் அம்மா கோபியை டாக்டரிடம் போகும்படியும், மேலும் பாக்கியாவையும் உடன் அழைத்து செல்லுமாறு கூறுகிறார். இதனால் புலம்பித் தவிக்கிறார் கோபி. இதையடுத்து இருவரும் ஹாஸ்பிடல் கிளம்புகின்றனர்.

அங்கு டாக்டரிடம் கோபிக்கு  நடந்ததை கூறுகிறார் பாக்கியா. அப்பொழுது கோபியை  பரிசோதித்த டாக்டர் ரொம்ப பெரிய  காயம் எதுவும் இல்லை சின்ன காயம்  தான் என கூறினார். அதன் பின்னர் டாக்டர் பாக்கியாவின் கால் பற்றி  கேட்க அப்பொழுது கோபிக்கு ராதிகா போன் செய்கிறார்.

அந்த போனை எடுத்து கொண்டு வெளியே செல்கிறார் கோபி . அப்போது ராதிகா தனக்கு விவாகரத்து கிடைத்து விட்டதாக கூறுகிறார். அப்பொழுது பாக்கியாவின் காலை பரிசோதித்த டாக்டர், உங்களின் கால் சரியாக வேண்டும் என்றால் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்குமாறு எச்சரித்து அனுப்புகிறார். இதையடுத்து வெளியே வரும் பாக்கியாவிடம் டாக்டரை திட்டுகிறார் கோபி. அதன் பின்னர் இருவரும் வீட்டிற்கு வருகின்றனர்.

அப்பொழுது வீட்டில் உள்ளவர்களிடம் தன் காலை பற்றி  டாக்டர் சொன்னதை சொல்லாமல் ஒன்றும் இல்லை என கூறி  வழக்கம் போல தனது வேலைகளை பார்க்க ஆரம்பிக்கிறார் பாக்கியா. அந்த தருணத்தில்  வரும் எழில் பாக்கியாவிடம் டாக்டர் என்ன சொன்னாங்கனு கேட்க அதற்கு பாக்கியா டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்கனு சொல்லிவிட்டு, கோபி இது பற்றி ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை என அழுதுக்கொண்டே சொல்கிறார்.

இதை கேட்ட எழில்,ஜெனி மற்றும் செல்வி அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். அதன் பின்னர் பாக்யாவுக்கு அவரின் கஸ்டமர் ஒருவரிடம் இருந்து போன் வருகிறது. அப்பொழுது அவர் சாப்பாடு கொண்டு வரவில்லை என்று திட்டுகிறார். இவ்வாறு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here