கண்ணனுக்கு ஜீவா மற்றும் கதிர் மூலம் உதவ முயற்சிக்கும் தனம்…!மறைந்திருந்து கேட்கும் மூர்த்தி!!!

0

விஜய் டிவியில் டாப் சீரியல்களின் வரிசையில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் இன்றைய கதையில், டாக்டர் தனத்திற்கு இன்னும் 2 வாரங்களில் குழந்தை பிறந்துவிடும் என்று கூற அதை கேட்டு தனம் மற்றும் மூர்த்தி கொள்ளை சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் மூர்த்திக்கு தெரியாமல் கண்ணனுக்கு, ஜீவா மற்றும் கதிர் மூலமாக உதவ முயற்சிக்கிறார் தனம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி வரும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை நடுரோட்டில் பார்த்து தனம் மற்றும் மூர்த்தி வேதனைப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய கதையில், அவர்களை பார்த்த படியே வேதனையில் பைக்கில் செல்கிறார் தனம்.

அதன் பின்னர் வீட்டிற்கு வரும் கண்ணன், அதை நினைத்து  வேதனைப்பட்டு அழுதுகொண்டே, தன் அண்ணன், அண்ணி தன் மீது கொண்ட நம்பிக்கையை உடைத்து விட்டதாகவும் விரைவில் நம் இருவரையும் ஏற்று கொள்வார்கள் என்று ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார்.

அதை கேட்ட ஐஸ்வர்யா கல்யாணம் முடிந்து  இவ்வளவு நாட்கள் ஆகியும்  நம்மை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இனி எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என கூறுகிறார். அதற்கு கண்ணன் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்கிறார். இவ்வாறு இருவரும் வேதனை படுகின்றனர்.

அதன் பின்னர் மளிகை சாமான்கள் எதுவும் இல்லை என ஐஸ்வர்யா கூற அதற்கு தன்னிடம் உள்ள பணத்தில் அரிசி மட்டுமாவது வாங்கி வருகிறேன் எனக் கூறுகிறார் கண்ணன் .

இந்நிலையில் டாக்டர் பார்க்க சென்ற மூர்த்தி மற்றும் தனத்திடம், டாக்டர் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் கூறுகிறார். மேலும் சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.  இதை கேட்டு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் மூர்த்தி மற்றும் தனம்.

அதன் பின்னர் தனம் மற்றும் மூர்த்தி குடோனுக்கு வருகின்றனர். அங்கு தனம் மற்றும் மூர்த்தி டாக்டர் சொன்ன விஷயத்தை சொல்ல ஜீவா மற்றும் கதிர் மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர்.

அதன் பின்னர் மூர்த்தி உள்ளே சென்றதும் தனம்,  ஜீவா மற்றும்  கதிரிடம் வழியில் கண்ணனை பார்த்ததாகவும், கையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் உடன் சென்றதாக ஆச்சரியம் மற்றும் வேதனையுடன் கூறுகிறார். இதையடுத்து கதிர் மற்றும் ஜீவாவை நோக்கி மூர்த்திக்கு தெரியாமல் ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை அவனுக்கு கொடுத்து விட  முடியுமா?? என கேட்கிறார்.

அதற்கு ஜீவா மற்றும் கதிர் இந்த விஷயம் எப்படியும் அண்ணனுக்கு தெரிந்து விடும் என கூறுகின்றனர். அதற்கு தனம் நம்ம வீட்டுக்கு என்று சொல்லி அனுப்பி வைக்குமாறு கூறுகிறார். இதனை மறைந்து இருந்து கேட்கிறார் மூர்த்தி. இவ்வாறாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here