ஒரு வருடம் கூட ஆகல., அதுக்குள்ள அறுத்துட்டு போயிருச்சே., பப்லு ஹார்ட்டை நொறுக்கிய ஷீத்தல் – வெளியான ஷாக்கிங் தகவல்!!

0
பப்லு ஹார்ட்டை நொறுக்கிய ஷீத்தல் - வெளியான ஷாக்கிங் தகவல்

தமிழ் சினிமாவில் அவள் வருவாளா என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். ஒரு கட்டத்தில் தொடர்ந்து வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன்பிறகு சின்னத்திரை சென்று நடிக்க தொடங்கினார். இதற்கிடையில் தனது மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு 24 வயதேயான ஷீத்தல் என்பவரை காதலித்து அவருடன் வாழ்ந்து வருகிறார். இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் இருவரும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்கள் காதலை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இருவரும் சேர்ந்து ஒன்றாக டான்ஸ் ஆடி வீடியோவை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் ஷீத்தல் தனியாக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், நெட்டிசன் ஒருவர் உங்களுக்கு பப்புலுக்கும் பிரேக் ஆகிவிட்டதாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஷீத்தல் பதில் அளிக்காமல் லைக் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அப்போ இரண்டு பேரும் பிரிந்து விட்டார்கள் போல என்று தகவலை பரப்பி வருகின்றனர். இது குறித்த அவர்கள் பக்கம் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here