அயலான் படத்திற்கு குரல் கொடுத்திருக்கும் பிரபல நடிகர்.. வெளியான நியூ அப்டேட்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK 21 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது அயலான் தான். இப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள நிலையில், தற்போது ஓர் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பதாக  தகவல்கள் உலா வந்த நிலையில், இந்த அப்டேட் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

சபரிமலை கோவிலில் நாளொன்றுக்கு இவ்வளவு பக்தர்கள் தான் அனுமதி., தேவசம்போர்டு வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here