
இந்தியாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொருட்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் பணி தாமதமாவதால் நுகர்வோர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க கூடுதல் ரேஷன் கடை, டோக்கன் முறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் “அன்னபூர்த்தி” என்ற ரேஷன் ATM முறை தொடங்கப்பட்டுள்ளது. இதில் நுகர்வோர்கள் தங்களது விரல் ரேகை மூலமாகவோ, ஸ்மார்ட் கார்டு மூலமாகவோ அவர்களுக்கான 3கி அரிசி, 2கி கோதுமையை ATM மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிவர்த்தனை 30 வினாடிகளில் முடிவடைந்துவிடுவதால் நுகர்வோர்கள் வந்த சில நேரங்களிலே வீட்டிற்கு திரும்பி விடுகின்றனர்.
துருக்கி, சிரியாவை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., பலி எண்ணிக்கை உயர்வு!!!
மேலும் சோதனையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டுமே வழங்கப்படுவதால் மேலும் நீட்டிக்கும் படி நுகர்வோர்கள் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.