உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கே எல் ராகுல்?? உண்மையை உடைத்த இந்திய முன்னாள் பயிற்சியாளர்!!

0

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில், கே எல் ராகுல் இடம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

கே எல் ராகுல்:

இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன் இந்த இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில், ஆஸ்திரேலிய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி தொடரை வென்றது. இந்த தொடரில், இந்திய அணி வென்றாலும், கே எல் ராகுலின் துணை கேப்டன் பதவி பறிபோனது மற்றும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் போனது தான் அதிக பேசு பொருளாக இருந்தது.

இவரது பேட்டிங் இடத்தை சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் இடத்தை கே எஸ் பரத்தும் பிடித்து விட்டனர். இவர்களில், சுப்மன் கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், அவர் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்து விட்டார். ஆனால், கே எஸ் பரத் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்தாலும் பேட்டிங்கில் தடுமாறியே வருகிறார். இதனால், கே எல் ராகுல் 5 வது அல்லது 6 வது இடத்தில் தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியை தொடர வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தான், கே எல் ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 75* ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதற்கிடையில், மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் இதே பார்முடன் இருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இவரது இடத்தை உறுதி செய்வார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here