ஒன்றிய அரசு துறைகளில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறைகேடு., ஊழியர் சங்கம் கடும் கண்டனம்!!!

0
ஒன்றிய அரசு துறைகளில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறைகேடு., ஊழியர் சங்கம் கடும் கண்டனம்!!!
ஒன்றிய அரசு துறைகளில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறைகேடு., ஊழியர் சங்கம் கடும் கண்டனம்!!!

இந்தியாவில் ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடுகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இதில் கடந்த 30 ஆண்டு காலமாக OBC பிரிவினருக்கு அரசுத்துறைகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இதுவரை வெறும் வார்த்தைகளில் மட்டுமே இட ஒதுக்கீடு செயல்படுகிறது என OBC ஊழியர் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனபோதும் 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால் இந்த சலுகையை ஒன்றிய அரசு துறைகளின் உயர்மட்ட பதவிகளில் (Gruop A மற்றும் B) செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நிலவி வருகிறது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்., அரிசி, கோதுமையை ATM-ல் பெறும் வசதி! மாநில அரசின் அன்னபூர்த்தி திட்டம்!!!

இதனால் சுமார் 12 அமைச்சகங்களில் ஒருவருக்கு கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த அட்டவணை வெளியிடப்பட்டதை மேற்கோள் காட்டி குறிப்பிட்ட இட ஒதுக்கீடுகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என அகில இந்திய OBC நல சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here