துருக்கி, சிரியாவை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., பலி எண்ணிக்கை உயர்வு!!!

0

துருக்கி, சிரியா போல தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

சில நாடுகளில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நிலநடுக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் துருக்கி, சிரியாவில் 6.4 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை கண்டு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தியா, இந்தோனேஷியா, நியூசிலாந்து என அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவாகி வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கயாஸ் நகரில் நேற்று 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடும் சேதமடைந்துள்ளதாகவும் சுமார் 44 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு ., வானிலை மையம் தகவல்!!!

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here