ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள் – பொம்மை காருக்கு பதில் பிஸ்கட் அனுப்பிய அமேசான்!!

0

அசாம் மாநிலத்தை சேர்ந்த விக்ரம் என்ற நபர் அமேசானில் பொம்பை கார் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பார்லே ஜி பிஸ்கட் வந்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பெருவாரியான மக்கள் பொருட்கள் வாங்க ஆன்லைன் ஷாப்பிங் தளங்களையே நம்பியுள்ளனர். ஏனெனில் குறிப்பிட்ட சில கடைகளை மட்டும் திறக்கவே பல்வேறு மாநில அரசுகள் உத்தரவை பிறப்பித்து வருகின்றன.

எனவே மக்கள் தாங்கள் விரும்பிய அனைத்து பொருட்களை பெற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான அமேசான் பிளிப்கார்ட் போன்றவற்றை நாடுகின்றனர். இவ்வாறு அஸ்ஸாமில் விக்ரம் என்பவர் அமேசான் ஷாப்பிங் தளத்தில் பொம்பை காரையும் அதனுடைய ரிமோட்டையும் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு அமேசான் அனுப்பியது பார்லே ஜி பிஸ்கட்.

இந்த சம்பவத்தை விக்ரம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் நான் பொம்பை கார் ஆர்டர் செய்ததற்கு பார்லே ஜி பிஸ்கட் வந்துள்ளது. நான் தற்போது இந்த பிஸ்கட்டை சாப்பிட டீ போடவேண்டும் என்று தன் அனுபவத்தை நகைச்சுவையாக ஷேர் செய்துள்ளார். அது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here