நம்ம மூஞ்சியா அது?? ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் நடிகை அனுபமாவின் படம்.. குழம்பிய தேர்வர்..

0
பீகார் ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் தேர்வு எழுதிய மாணவருக்கு பதில் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ள சம்பவம் அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வில் முடிவில் ஏற்பட்ட குழப்பம்

பிஹாரில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கான ஆசிரியர் தகுதி தேர்வு 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் உருது, சமஸ்கிருதம், அறிவியல் போன்ற பாடங்களுக்கான முடிவுகள் வரவில்லை. தற்போது இந்த பாடங்களின் முடிவுகள் வந்துள்ளது. அதில் ரிஷிகேஷ் குமார் என்ற தேர்வர் 3 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவருடைய மதிப்பெண் பட்டியலிலும் மதிப்பெண்கள் தெளிவான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ள புகைப்படத்தில் இவர் புகைப்படத்துக்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது அனைவர்க்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவவே பலரும் பீகார் ஆசிரியர் தேர்வு நடத்தும் வாரியத்தை கடுமையாக சாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here