மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து சேவை – முதல்வர் துவக்கி வைப்பு!!

0

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவும் விதமாக கௌஹாத்தியில் பிங்க் நிற பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த இலவச பேருந்து சேவையை அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பிங்க் பேருந்துகள்:

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக பேருந்து சேவை கடந்த சனிக்கிழமையன்று அஸ்ஸாம் மாநில முதல்வரால் துவங்கிவைக்கப்பட்டது. மொத்தம் 25 பிங்க் நிற பேருந்துகளை அவர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இது குறித்து பேசிய அசாம் முதல்வர், “இந்த பேருந்து சேவையானது பெண்கள் மற்றும் வயதானோருக்கு மிகவும் பயனுள்ள மகத்தான சேவையாக விளங்கும்” என்று கூறினார்.

கோழி விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய தற்காலிக தடை – பறவை காய்ச்சல் எதிரொலி!!

தொடர்ந்து அவர், அஸ்ஸாம் மாநில பேருந்து சேவை இந்த புத்தாண்டில் பல நல்ல திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. ஐந்து வழித்தடங்களில் செயல்படும் இந்த பேருந்து சேவையை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கொரோனா தொற்று காலத்தில் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றிய அஸ்ஸாம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரமோஹன் படோவாரி மற்றும் அனைத்து போக்குவரத்து துறை ஊழியர்களையும் அவர் பாராட்டினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் “அஸ்ஸாம் போக்குவரத்து துறையின் பேருந்துகள் வடகிழக்கு பகுதிகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளுக்கும் பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கொரோனா லாக் டௌனிலும் கூட அவற்றின் சேவை தொடர்ந்து மக்களுக்கு கிடைத்தது. பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனது அரசு இந்த பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது” எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here