ஆசிய கோப்பையில் தொடர்ந்து அசத்தும் இந்தியா…, மலேசியாவை வீழ்த்தி முதலிடம் அபாரம்!!

0
ஆசிய கோப்பையில் தொடர்ந்து அசத்தும் இந்தியா..., மலேசியாவை வீழ்த்தி முதலிடம் அபாரம்!!
ஆசிய கோப்பையில் தொடர்ந்து அசத்தும் இந்தியா..., மலேசியாவை வீழ்த்தி முதலிடம் அபாரம்!!

ஜூனியர் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், தலா 5 அணிகள் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் போட்டியிட்டு வருகின்றனர். இதில், இந்திய அணியானது குரூப் A யில் தென் கொரியா, மலேசியா, சீன தைபே மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தனது முதல் லீக் சுற்றில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய மகளிர் அணி 22 கோல்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, நேற்று 2 வது லீக் போட்டியில் மலேசிய அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், மலேசியாவின் டியான் நசெரி 6 வது நிமிடத்திலேயே கோல் அடிக்க, 10 வது நிமிடத்தில் இந்தியாவின் மும்தாஜ் கான் கோல் ஒன்றை அடித்து பதிலடி கொடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் தீபிகா 26 வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம், ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இந்திய அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறுவதில் முன்னிலை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here