ஒரே போட்டியில் அஸ்வின் படைத்த 3 மகத்தான சாதனைகள்…, முழு விவரம் இதோ!!

0
ஒரே போட்டியில் அஸ்வின் படைத்த 3 மகத்தான சாதனைகள்..., முழு விவரம் இதோ!!
ஒரே போட்டியில் அஸ்வின் படைத்த 3 மகத்தான சாதனைகள்..., முழு விவரம் இதோ!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 3 மகத்தான சாதனைகளை படைத்துள்ளார்.

அஸ்வின்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களே முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதில், அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணி சேர்ந்து, 2 இன்னிங்ஸில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களில் அஸ்வின் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 மகத்தான சாதனையை படைத்துள்ளார். அதாவது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், 96 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக ஓர் அணிக்கு எதிராக விக்கெட்டுகளை சாய்த்த 2வது இந்திய வீரர்களில் முதலிடத்தில், இந்திய ஜாம்பவானான அனில் கும்ளே 111 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

மொனாக்கோ அணியிடம் வீழ்ந்த பிரபல PSG அணி…, ஏமாற்றம் தந்த நெய்மர்!!

மேலும், சர்வதேச அளவில் சொந்த மண்ணில், நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 25 முறை, 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் (52 டெஸ்ட்), அனில் கும்ளேயுடன் (63 டெஸ்ட்) 3வது இடத்தை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து, ஓட்ட மொத்த டெஸ்ட் அரங்கில், இந்தியாவுக்காக 31 முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளே உடன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here