மொனாக்கோ அணியிடம் வீழ்ந்த பிரபல PSG அணி…, ஏமாற்றம் தந்த நெய்மர்!!

0
மொனாக்கோ அணியிடம் வீழ்ந்த பிரபல PSG அணி..., ஏமாற்றம் தந்த நெய்மர்!!
மொனாக்கோ அணியிடம் வீழ்ந்த பிரபல PSG அணி..., ஏமாற்றம் தந்த நெய்மர்!!

பிரெஞ்சு கோப்பை தொடரில், மொனாக்கோ அணியிடம் பிரபல பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

PSG vs மொனாக்கோ:

வெளிநாடுகளில் நடைபெற்று வரும், பிரெஞ்சு கோப்பை கால்பந்து தொடரில், மெஸ்ஸின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணியானது, மொனாக்கோ அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், நட்சத்திர வீரரான மெஸ்ஸி காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. இதனால், PSG அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான நெய்மர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போட்டி தொடங்கிய 4வது நிமிடத்திலேயே, மொனாக்கோ அணியின் அலெக்சாண்டர் கோலோவின் கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனை தொடர்ந்து, விஸ்ஸாம் பென் யெடர் 18 மற்றும் 45+2 ஆகிய நிமிடங்களில் மொனாக்கோ அணி சார்பாக 2 கோல்கள் அடித்தார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா…, இதுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டேன்! விருது குறித்து உருக்கமான பேட்டி!!

இதற்கிடையில், சற்று வேகம் காட்ட தொடங்கிய PSG அணியின் வாரன் ஜைர்-எமெரி 39 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில், மொனாக்கோ அணியானது 3-1 என்ற கோல் முன்னிலையில் இருந்தது. இதே நிலையே, ஆட்ட இறுதி வரை தொடர்ந்ததால், PSG அணியானது மொனாக்கோ அணியிடம் தோல்வியை தழுவியது. ஆனாலும், பிரெஞ்சு கோப்பைக்கான புள்ளிப் பட்டியலில், 54 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here