ஆசிரியர்கள் பணி நியமனம் 48 மணி நேரத்தில் நடக்க வேண்டும்.., வெளிவந்த முக்கிய செய்தி!!

0
ஆசிரியர்கள் பணி நியமனம் 48 மணி நேரத்தில் நடக்க வேண்டும்.., வெளிவந்த முக்கிய செய்தி!!
ஆசிரியர்கள் பணி நியமனம் 48 மணி நேரத்தில் நடக்க வேண்டும்.., வெளிவந்த முக்கிய செய்தி!!

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தகுதி தேர்வில் வெற்றி பெரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு முதல் பணி நியமனத்திற்காக போட்டி தேர்வு ஒன்றை எழுத வேண்டும் என தேர்வு வாரியம் அறிவித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த பட்டதாரி ஆசிரியர்கள், போட்டி தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கிடையில் தான், ‘கடந்த 2013ம் ஆண்டில், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், போட்டி தேர்வின்றி, அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்கப்படும்’ என, 177வது அம்சமாக திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால், இன்று வரை இதனை நிறைவேற்றாததால், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து நேற்று 4ம் நாளாக போராட்டம் நடத்தினர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(13.05.2023) – முழு விவரம் உள்ளே!!

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை போராட்டக்காரர்களை நேரில் சந்தித்துள்ளார். இவர்களுடன் கலந்து பேசிய பிறகு, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானதே என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இன்று முதல் 48 மணி நேரம் தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்கிறோம். அதற்குள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான நல்ல முடிவை தமிழக அரசு அளிக்க வேண்டும். இல்லையென்றால், வரும் 15ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுடன் இணைந்து நாங்களும் ( பா.ஜ.க) போராட்டத்தில் இறங்குவோம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here