ரேஷன் அட்டைதாரர்களே., உடனே இத முடிச்சிடுங்க?? இல்லனா சலுகைகள் கிடைக்காது!!!

0

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொருட்களை நியாய விலை கடை மூலம் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இது போக நாட்டின் எந்த ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெறும் வகையில் “ஒரே நாடு ஒரே கார்டு” திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை நுகர்வோர்கள் தொடர்ந்து பெறுவதற்கு ரேஷன் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசமாக வருகிற ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஒரு சில நிமிடங்களில் பதிவு செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,

  • ஆதார் இணையதளமான uidai.gov.in என்ற தளத்தில் சென்று Start Now என்பதை கிளிக் செய்யவும்.
  • இங்கே தங்களது மாவட்ட மாநிலத்துடன் முழு முகவரியையும் உள்ளிட வேண்டும்.
  • பிறகு Benefit என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மொபைல் எண், இமெயில் ஐடிகளை பூர்த்தி செய்யவும்.
  • இதனை உறுதி செய்ய மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTPயை உள்ளிட வேண்டும்.
  • அவ்ளோதான்., இந்த செயல்முறை முடிவடைந்ததற்கான குறுஞ்செய்தி மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
  • இதேபோல் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார், ரேஷன் கார்டு நகல், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை ரேஷன் கடையில் கொடுத்து பயோமெட்ரிக் மெஷின் உதவியுடன் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைத்து விடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here