ஆந்திராவில் மதுபான விலை குறைப்பு – ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிர்ப்பு!!

0

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வேலை வாய்ப்பு, நலத்திட்டம் என நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில், வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை குறைத்து அதிருப்தியை எதிர் கொண்டுள்ளார்.

அறிக்கை தாக்கல்

நமது அண்டை மாநிலமான ஆந்திராவில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன், உள் நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. இதனையடுத்து, மற்ற மாநிலங்களிலிருந்து இவ்வகை மது பானங்கள் கடத்தி வரப்பட்டன. இது, மாநிலத்திற்கு வர வேண்டிய கலால் வரியை பாதித்தது. இதனை ஆராய, ஆந்திர அரசால் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் அறிக்கையில், ‘அண்டை மாநிலங்களை விட, ஆந்திராவில் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை அதிகமாக உள்ளது. இதனால், இவ்வகை மது பானங்கள் கடத்தி வரப்படுகின்றன. செப்., 15 முதல் அக்.,15 வரை, கடத்தல் வழக்கு 630 பதிவாகி உள்ளது. இதனால், விலை குறைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனையடுத்து, ஆந்திர அரசு வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 25 முதல் 30 சதவீதம் குறைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here