நாளை வானில் ஒரு அதிசயம் – ப்ளூ மூன் பார்க்கலாம்!!

0

ஒரு மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில்,இரண்டாவதாக வரும் முழு நிலவே ப்ளூ மூன் என்று அழைக்கப்படும். கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முழு நிலவு தெரிந்தது. அதன்பிறகு நாளை முழு நிலவு வானில் தெரியப் போகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசையும்,முழு நிலவும் தோன்றும். ஆனால் அரிதான நிகழ்வான ஒரே மாதத்தில் இருமுறை தோன்றும் முழு நிலவே ப்ளூ மூன் ஆகும். ப்ளூ மூன் நிகழ்வின் போது நிலவில் எந்த ஒரு மாற்றமும் தோன்றாது. வழக்கத்தை விட கூடுதலான முழு நிலவு தோன்றுவது தான் இதன் சிறப்பு. 29 நாட்களுக்கு ஒருமுறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 மற்றும் 31 நாட்கள் வருவதால் சராசரியாக இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை ப்ளூ மூன் தோன்றும்.

இந்த ப்ளூ மூனை தவறவிட்டலால் அடுத்து வரும் ப்ளூ மூனுக்காக இரண்டரை வருடம் காத்திருக்க வேண்டும். அடுத்து 2023 ஆகஸ்ட் 31 ஆம் தேதியும், 2026 மே 31 ஆம் தேதியும், 2028 டிசம்பர் 31 ஆம் தேதியும் மீண்டும் ப்ளூ மூன் தோன்றும். இந்த ப்ளூ மூன் வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல பகுதிகளில் தோன்றும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மிக எளிதில் யாரும் இந்த ப்ளூ மூனை பார்க்க முடியாது. இதை புகைப்படமும் எடுக்க முடியாது என்றார் வானியல் கல்வியாளர் ஜெப்பரி ஹன்ட். டெலிபோட்டோ உதவியுடன் எடுத்தால் நிலவை சுற்றி பெரிதாக காட்டும் எனவும் கூறியுள்ளார். இந்த ப்ளூ மூனை பார்க்க தவறிவிட்டால் அடுத்து இரண்டரை வருடங்களுக்கு பாக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here