10,000 ஆண்டுகளுக்கு செயல்படக்கூடிய கடிகாரம்., ரூ.350 கோடியா? அமேசான் நிறுவனர் ஷாக்கிங் நியூஸ்!!!

0
10,000 ஆண்டுகளுக்கு செயல்படக்கூடிய கடிகாரம்., ரூ.350 கோடியா? அமேசான் நிறுவனர் ஷாக்கிங் நியூஸ்!!!
சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ். ரூ.350 கோடி செலவில் கடிகாரம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.   டெக்சாஸ் நகரில் அவருக்கு சொந்தமான மலை ஒன்றில் 500 அடி உயரமாக கட்டப்பட உள்ள இந்த கடிகாரம், 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
அறிவியல் அறிஞர் டேனி ஹில்லிஸ்-ன் கடிகார திட்டத்தை வைத்து அமைய உள்ளதால் கடிகாரத்திற்கு “க்ளாக் ஆப் தி லாங் (Clock of the Long)” என பெயரிட்டுள்ளனர். மேலும் கடிகாரத்தின் நொடி முள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நகரும் எனவும், 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனை பார்வையிடும் மக்களுக்கு தங்களது பெயரும் காலம் கடந்து நிற்க வேண்டும் என்ற ஊக்கத்தை தரும் என கடிகாரக் கட்டுமானத் திட்ட குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here