ரீஎன்ட்ரி என்ற பெயரில் விஜய் டிவிக்கு ஆப்படித்த ஆல்யா மானசா – நாங்க இத எதிர்பார்க்கவே இல்லயே!

0
ரீஎன்ட்ரி என்ற பெயரில் விஜய் டிவிக்கு ஆப்படித்த ஆல்யா மானசா - நாங்க இத எதிர்பார்க்கவே இல்லயே!

சீரியல் நடிகையான ஆல்யா மானசா விஜய் டிவி அல்லாது மற்றொரு முக்கிய சேனலின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.

ஆல்யா மானசா:

விஜய் டிவியில் முக்கிய சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன் சக நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார்.

அப்பொழுது இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் அந்த சீரியலை விட்டு விலகினார். இவர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கமாட்டாரா என்று தான் இவரின் ரசிகர்கள் காத்து இருந்தனர். ஆனால் சில காலமாக இவர் மீண்டும் சீரியலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது அவர் எந்த தொலைக் காட்சியில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆல்யா, சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் நடிக்க உள்ளாராம். விஜய் டிவியால் வளர்த்து விடப்பட்ட ஒரு நடிகை தற்போது ரீஎன்ட்ரியில் சன் டிவியில் நடிக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here