வீட்டு பணி பெண்ணுக்காக அல்லு அர்ஜுன் செய்த காரியம் – ச்சா., இந்த மாதிரி கூட செய்வாங்களா? – வீடியோ வைரல்!!

0
வீட்டு பணி பெண்ணுக்காக அல்லு அர்ஜுன் செய்த காரியம் - ச்சா., இந்த மாதிரி கூட செய்வாங்களா? - வீடியோ வைரல்!!
தெலுங்கில் முக்கியமான நடிகராக இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ,முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பார்ட் 2க்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு அவர் செய்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வரும் பொன்னி என்பவருக்கு சோசியல் மீடியா மீது அதிகம் நாட்டம் இருந்துள்ளது.
சொல்ல போனால் அவருடைய வலைத்தளத்தை நெறய பேர் பின்தொடர விரும்பியுள்ளார். இதை அறிந்து கொண்ட அல்லு அர்ஜுன் அந்த பெண்ணை அருகில் வைத்து அந்த பெண்ணுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அல்லு அர்ஜுன் அந்த பெண்ணிடம் இதுவரை உன்னை எத்தனை பேர் Follow செய்கிறார்கள் எனக் கேட்கிறார். அதற்கு அந்தப் பெண்ணோ சிரித்து கொண்டே 13 ஆயிரம் கூறி, 13 ஆயிரம் என்பதை விட 30 ஆயிரம் இருந்தால் நன்றாக இருக்கும் என வெட்கப்படுகிறார். இதைக்கேட்டு சிரிக்கும் அல்லு அர்ஜுன், ‘சரி, இந்த வீடியோவால் அதை அதிகரிக்கலாம்’ என்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here