கோவை – பெங்களூர் வந்தே பாரத் ரயில்., எப்போது இயக்கப்படும்? டிக்கெட் விலை? IRCTC முக்கிய அறிவிப்பு!!

0
 கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்., எப்போது இயக்கப்படும்? டிக்கெட் விலை? IRCTC முக்கிய அறிவிப்பு!!
ரயில் பயணத்துக்கான நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் பாரத பிரதமரால் கொண்டு வரப்பட்டது தான் வந்தே பாரத் ரயில் திட்டம். 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில் சேவை  தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் – பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பாரதப் பிரதமர் காணொளி வாயிலாக நாளை டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த ரயில் சேவையானது வாரத்தில் வியாழக்கிழமை தவிர மீதம் ஆறு நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கோயம்புத்தூரில் – பெங்களூர்  வந்தே பாரத் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் கட்டணம் குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here