ஜீ தமிழில் இணைய இருக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி, அகிலன் ஜோடி – அப்டேட்டை கேட்டு ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருந்த அகில் மற்றும் அஞ்சலி மீண்டும் பூவே பூச்சூடவா என்னும் தொடரில் இணையவுள்ளனர். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பூவே பூச்சூடவா 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இருக்கும் ரசிகர்களை விட அகில் மற்றும் அஞ்சலியின் ஜோடிக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டங்கள் உள்ளனர்.

தற்போது சில மாதங்களுக்கு முன்பாக அகில் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார். இருவரும் அடுத்து எப்போது ஒன்றாக இணைந்து நடிக்கப்போகிறீர்கள் என ரசிகர்களிடம் இருந்து ஏகப்பட்ட கேள்விகள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஹோரா என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்னும் சீரியல் தற்போது முடிவடைந்தது. இந்த தொடரில் ரேஷ்மா மற்றும் தினேஷ் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த சீரியலின் இரண்டாம் பாகம் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் அகில் மற்றும் அஞ்சலி இருவரும் இனைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here