நடிகர் சித்தார்த்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!  

0
கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர்  தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் ஹீரோவாக நடித்த  3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தாலும் மக்கள் மனதில் தற்போது வரை நீங்கா இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படம் தான்  லால் சலாம். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்ததாக இயக்க இருக்கும் படம் குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது இவர் இயக்கும் புதிய படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை லைக்கா அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த திரைப்படம் குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here