நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருக்கும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு.., முழு லிஸ்ட் உள்ளே!!

0
நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருக்கும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு.., முழு லிஸ்ட் உள்ளே!!
நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருக்கும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு.., முழு லிஸ்ட் உள்ளே!!

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதைத்தொடர்ந்து கட்டண உயர்வு குறித்த பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 55 சுங்கச்சாவடிகளில் 29 இடத்தில் மட்டும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பட்டியலில் குறிப்பிட்டுள்ள கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இதில் நான்கு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்களுக்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.60 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

IPL 2023: இறுதிப் போட்டிக்கான வழிகள் என்னென்ன?? முழு விவரம் உள்ளே!!

அதாவது நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.60 லிருந்து ரூ.70 ஆகவும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.105 லிருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205 லிருந்து ரூ.240 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உயர்வால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த கட்டண உயர்வு மோசமான அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here