IPL 2023: இறுதிப் போட்டிக்கான வழிகள் என்னென்ன?? முழு விவரம் உள்ளே!!

0
IPL 2023: இறுதிப் போட்டிக்கான வழிகள் என்னென்ன?? முழு விவரம் உள்ளே!!
IPL 2023: இறுதிப் போட்டிக்கான வழிகள் என்னென்ன?? முழு விவரம் உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வழி குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காணலாம்.

IPL 2023:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசன் 10 அணிகளுக்கு இடையே இன்று (மார்ச் 31) முதல் கோலாகலமாக கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. இன்று (மார்ச் 31) மாலை 6மணி முதல் இந்திய நட்சத்திரங்கள் பலர், இந்த ஐபிஎல் தொடக்க விழாவை அலங்கரிக்க தயாராகி வருகின்றன. இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு செல்லும் பாதை குறித்த முழு விவரத்தையும் பின்வருமாறு காணலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடப்பு ஐபிஎல் தொடரில், 10 அணிகள் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில், ஓர் அணி தனது குரூப்பில் உள்ள அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும், மற்றொரு குரூப்பில் உள்ள அணிகளுக்கு எதிராக தலா இரு முறையும் மோத உள்ளன. இதன் படி, ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. ஒட்டு மொத்தமாக 70 போட்டிகள் கொண்ட இந்த லீக் போட்டிகள், இன்று (மார்ச் 31) முதல் மே 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் நடிகை?? அப்போ மூட்டையை கட்ட வேண்டியது தான்!!

இந்த லீக் போட்டிகளின் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், தகுதி சுற்று 1 ல் போட்டியிடும். இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மேலும், லீக் போட்டிகளின் முடிவில் 3 மற்றும் 4 வது இடங்களை பிடித்துள்ள அணிகள், எலிமினேட்டர் சுற்றில் மோதும். இந்த சுற்றில், வெற்றி பெறும் அணி, தகுதி சுற்று 1ல் தோல்வி அடைந்த அணிக்கு எதிராக, தகுதி சுற்று 2ல் மோத இருக்கிறது. இந்த தகுதி சுற்று 2 ல் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதையடுத்து, மே 28ம் தேதி ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here