ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் அப்படி ஒரு முடிவை எடுத்த ஸ்ரீ திவ்யா., அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்!!

0
தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் மனதில் ஜொலித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து படவாய்ப்பு குவியத் தொடங்கியது.

இதற்கிடையில் சரியான கதைக்களத்தை  தேர்ந்தெடுத்து நடிக்காததால், இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. இப்படி இருக்கையில் பட வாய்ப்பில்லாமல் தவித்து வரும் இவர் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் நடிக்க இருக்கும் அவரது 27 ஆவது படம் குறித்த அப்டேட் அண்மையில் வெளியாகியிருந்தது.  மேலும் இப்படத்தில் ஸ்ரீ திவ்யா தங்கை ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஸ்ரீதிவ்யாவுக்கு இந்த நிலைமையா?? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here