அந்த மாதிரி விடியோல என்னை எடிட் பண்ணிட்டாங்க.., ஆதங்கத்தில் குமுறிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!!

0
அந்த மாதிரி விடியோல என்னை எடிட் பண்ணிட்டாங்க.., ஆதங்கத்தில் குமுறிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!!
அந்த மாதிரி விடியோல என்னை எடிட் பண்ணிட்டாங்க.., ஆதங்கத்தில் குமுறிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!!

நடிகை ரேஷ்மா சமீபத்தில் நடந்த விவாத மேடை நிகழ்ச்சியில் தனது அந்தரங்க வீடியோ குறித்து போல்டாக பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ரேஷ்மா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகை ரேஷ்மா. குறிப்பாக விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா ஆட்டக்காரி கேரக்டரில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பரவினார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கரு.பழனியப்பன் தொகுத்து வரும் விவாத மேடை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது அந்தரங்க வீடியோ குறித்து போல்டாக பேசினார். அவர் பேசியதாவது, “என் தங்கச்சி திடீரென்று கால் செய்து உன்னுடைய செக்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது என்று தெரிவித்தார். நான் திகைத்து நின்றேன். நான் அமெரிக்காவில் இருக்கிறேன், எனக்கு எந்த பாய் பிரண்டும் இல்லை, அப்புறம் எப்படி என் வீடியோ லீக்காகும். அத முதல்ல எனக்கு சென்ட் பண்ணு என்று கூறினேன். இந்த விஷயத்தை என் அம்மா என்கிட்ட நேரடியாக கேட்காமல் தங்கச்சி மூலம் இதை கேட்டுள்ளார்.

நியூ Year-ல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.., அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்!!

அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது. முழுக்க முழுக்க மார்பிங் வீடியோ என்று தனது குடும்பத்தினருக்கு புரிய வைத்தேன். என்னுடைய குடும்பத்தினர் சினிமா துறையில் இருந்ததால் அதை புரிந்து கொண்டார்கள். ஆனால் ஏழை எளிய பெண் ஒருவருக்கு இது போன்ற காரியம் நடந்தால் நிச்சயம் அவர் பாதிக்கப்பட்டு இருப்பார். மேலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரை சென்றிருக்கலாம். என் குடும்பம் இந்த சம்பவத்தை பொறுமையாக கடைபிடித்து எதிர்கொண்டனர் என்று வெளிப்படையாக ரேஷ்மா பசுபுலேட்டி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here