உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: குறிப்பிட்ட இந்த அணிகளுக்கு மட்டும் தான் அதிக வாய்ப்பு…, முழு விவரம் உள்ளே!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: குறிப்பிட்ட இந்த அணிகளுக்கு மட்டும் தான் அதிக வாய்ப்பு..., முழு விவரம் உள்ளே!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: குறிப்பிட்ட இந்த அணிகளுக்கு மட்டும் தான் அதிக வாய்ப்பு..., முழு விவரம் உள்ளே!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 9 அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த வகையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிட்டது. இதன்படி, நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போட்டியை டிரா செய்தாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்கனவே இரு அணிகளும் இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளும் இறுதி சுற்று வாய்ப்பை இழந்தன. இந்த அணிகளை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியும் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவாக தான் உள்ளது.

2022ன் கடைசி சூரிய உதயம்…, விராட் கோலி காதல் மனைவியுடன் பகிர்ந்த பதிவு!!

இதனால், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகளுக்கு மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணியானது, 78.57 PCT யுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற 3 அணிகளில், இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில், அதிகபட்சமாக 68.06 சதவீதத்துடன் 2வது இடத்தை பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here