முதல் முறையாக இணையும் பா.ரஞ்சித்-விக்ரம் கூட்டணி – சியான் 61 படத்தின் மாஸான அப்டேட்!!

0

இயக்குனர் பா.ரஞ்சித்துடன் நடிகர் விக்ரம் இணையவுள்ள சியான் 61 படத்தின் மாஸான அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சியான் 61:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். சியான் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர்,  கடந்த 2019ஆம் ஆண்டு கடாரம் கொண்டான் என்ற படத்தில் கடைசியாக நடித்து முடித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை. இதையடுத்து தனது, பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்தார். மேலும் தனது மகன் துருவ் உடன் இணைந்து மகான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இஇந்த நிலையில் தற்போது சியான் 61 படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க உள்ளதாகவும், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. பொதுவாகவே வித்தியாசமான கதைகளை தரும் பா.ரஞ்சித் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here