ரஜினி இடத்தை பிடிக்கும் சிவகார்த்திகேயன் – இயக்குனர் நெல்சன் வைத்த அதிரடி ட்விஸ்ட்!!

0
தலைவர் 169 படத்தில் என் பங்கு இல்லவே இல்லை - உறுதியாக அறிவித்த பிரபல இயக்குனர்!!
ஒரு விஷயம் பிடிக்கலைன்னா ரஜினியின் ஆக்சன் இதான் - சுந்தர் சி சொன்ன சுவாரஸ்ய தகவல்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் அவரது இளவயது கதாபாத்திரத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மாஸ் அப்டேட் :

நடிகர் ரஜினி, தனது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான, நடிகர் நடிகையர் தேர்வு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை முடித்த பிறகு வருகிற ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அதில் சற்று சறுக்கலை சந்தித்ததால், தலைவர் 169 படத்தை இயக்க புது பிரச்சனை எழுந்ததாக பேசப்பட்டது.

ஆனால், அனிருத் ரஜினியை சமாதானப்படுத்தியதை அடுத்து சூப்பர் ஸ்டார் இதற்கு சம்மதம் சொல்லியதாக தெரிகிறது. இந்த நிலையில், படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அதுவும் இந்த படத்தில், ரஜினியின் இளவயது ரோல் காட்டப்பட உள்ளதாகவும், அந்த ரோலில் நடிகர் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ரஜினி இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புகிறார் என அவரது ரசிகர்கள் தம்பட்டம் அடித்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here