மாஸாக வெளியான ‘அமரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. அதிரடிக்கு பஞ்சம் இல்லை!!

0
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாக நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. நடிகர் சிவகார்த்திகேயன் கதைநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி  இயக்கி இருக்கிறார். நடிகை சாய் பல்லவி, லல்லு பிரசாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில், ‘அமரன்’ திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகி வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த போஸ்டரில், சுற்றிலும் ராணுவ வீரர்கள் நிற்பது போலவும்,  சிவகார்த்திகேயன் கையில் ஆயுதத்தை ஏந்தி நிற்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படி மாஸாக வெளியான ‘அமரன்’ படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here