ரிலீசுக்கு பிறகு மாநாடு படத்திற்கு வந்த புதிய சிக்கல் – உட்சபட்ச வேதனையில் படக்குழுவினர்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி ரீலீஸான மாநாடு திரைப்படம் தமிழ் மூவி ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் லீக்காகி இருப்பது படக்குழுவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதிர்ச்சியில் படக்குழு:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் மாநாடு. கடந்த சில தினங்களுக்கு முன் திரையரங்கத்தில் ரீலீஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதனை நடிகர் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் வெற்றி விழாவாக கொண்டாடினர்.

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. தற்போது,இந்த படக்குழுவினருக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது,இந்த பட காட்சிகள் தமிழ் ராக்கர்ஸ், மூவி ரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணைய தளங்களில் லீக்கானது. இது,குறித்த நடைவடிக்கைகளை இனியாவது அரசு எடுக்க வேண்டும் என்பது படக்குழுவினர் உள்ளிட்ட பலரின் கோரிக்கையாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here