இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏன் குழந்தை பெத்துக்கல?? நடிகர் சாந்தனு ஓபன் டாக்!!

0

பிரபல இயக்குனரும் மகனாகவும், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருபவர் தான் நடிகர் சாந்தனு. ஆரம்பத்தில் இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், தற்போது வரை பெரிய ஹிட் கொடுக்காமல் திணறி கொண்டு தான் இருக்கிறார். இவர் தற்போது ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதற்கிடையில் சாந்தனு பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தி என்கிற கிகி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் ஓர் முக்கிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், நாங்கள் திருமணத்திற்கு சென்றாலே குழந்தை எப்போன்னு கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள், நாங்கள் இப்போது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் குழந்தையை பெத்துக்க கூடாது என்று முடிவு எடுக்கவில்லை, எது வர வேண்டுமோ அது சரியான நேரத்தில் வரும் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here