என்னது., லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!

0
என்னது., லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!
கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதில்  நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், நடிகை தன்யா பாலகிருஷ்ணா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனால் இப்படம் குறித்து அப்டேட்கள் அடுத்தடுத்து இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்திற்கு அவர் ரூ.40 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் படத்துக்காக ரூ.110 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here