திருமணத்தை நம்பி மொத்தத்தையும் இழந்த பரத் பட நடிகை – மாப்பிளையே கொள்ளையடித்த சோகம்!!

0
bharath

கோலிவுட் நடிகை பூர்ணா, தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இதற்கு முன்னதாக நிச்சயக்கப்பட்ட ஒருவர் அவரை ஏமாற்றி விட்டு போன செய்தி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 ஏமாற்றப்பட்ட நடிகை :

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் அவுனு என்ற பேய் படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர், தனது நீண்ட நாள் காதலரான ஷானிட் ஆசிப் அலி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தார்.

இதற்கு முன் நடிகை தான் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், அவருக்கு மாப்பிள்ளையாக நிச்சயிக்கப்பட்டவர் அவரை ஏமாற்றி பணம் நகை உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றார். இது எந்த ஒரு நடிகைக்கும் ஏற்படக்கூடாது என பலரும் நடிகைக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதிலிருந்து மீண்ட நடிகை, தற்போது ஷானிட் ஆசிப் அலி என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இதையடுத்து, பலரும்  நடிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here