இறந்த தந்தையை பற்றி சீக்ரெட்டை வெளியிட்ட மகேஷ்பாபு.., அவர் இப்படிப்பட்டவரா?

0
இறந்த தந்தையை பற்றி சீக்ரெட்டை வெளியிட்ட மகேஷ்பாபு.., அவர் இப்படிப்பட்டவரா?
இறந்த தந்தையை பற்றி சீக்ரெட்டை வெளியிட்ட மகேஷ்பாபு.., அவர் இப்படிப்பட்டவரா?

நடிகர் மகேஷ்பாபு தனது தந்தையை நினைத்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் மகேஷ்பாபு:

தெலுங்கு வட்டாரங்களில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மகேஷ்பாபு. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவருடைய தந்தையும் முன்னாள் தெலுங்கு சூப்பர் ஸ்டரான நடிகர் கிருஷ்ணா கடந்த நவம்பர் 15ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் மகேஷ் பாபு தவித்து வரும் நிலையில், தற்போது தனது தந்தையை நினைத்து ஒரு உருக்கமான பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, “நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை எல்லாராலும் கொண்டப்பட்டது. மேலும் உங்களின் இறப்பு அனுசரிக்கப்பட்டது. யாருக்கும் பயப்படாமல் துணிவுடன் வாழ்ந்து வந்தீர்கள். என்னுடைய தைரியமும், துணிச்சலும் நீங்கள் தான். இப்படி எல்லாமாக இருந்த நீங்கள் தற்போது என்னை விட்டு மறைந்து விட்டீர்கள்.

தொடரும் நில மோசடி வழக்கு.., மத்திய குற்றப்பிரிவிடம் நான்காவது முறையாக ஆஜரான நடிகர் சூரி !!

குறிப்பாக எனக்குள் இதுவரை உணராத ஒரு உணர்ச்சியை இக்கணம் உணர்கிறேன். இப்போதெல்லாம் நான் எதற்கும் பயப்படவில்லை. மேலும் உங்கள் ஒளி என் மீது எப்பொழுது பிரகாசித்து கொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் வாழ்ந்த மாதிரி நான் வாழ்ந்து காட்டுவேன்.

 

உங்களை பெருமை படுத்துவேன். ஐ லவ் யூ நானா.., என்னுடைய சூப்பர் ஸ்டார் எப்பொழுதும் நீங்கள் தான்” என்று உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here