பிறந்தநாளை கொண்டாடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – வைரலாகும் காமன் டிபி!!

0

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வருபவர் நடிகர் குமரன். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி வைத்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் குமரன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடரில் கதிர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன். நடன கலைஞரான குமரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த குமரன், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என லட்சியம் கொண்ட நடிகர் குமரனுக்கு திரைத்தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு விஜய் தொலைக்காட்சி மூலம் கிடைத்தது.

மீண்டும் லாக்டவுனுக்கு வாய்ப்பா??இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!!

ஆரம்பத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற தொடரில் மாறன் என்ற சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் குமரன். இந்த தொடரில் மிக குறுகிய நாட்களே நடித்திருந்தாலும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் நடிகர் குமரனுக்கு அவர் எதிர்பார்த்த அளவு பேரையும், புகழையும், ரசிகர்களையும் சம்பாதித்து தந்தது. முன்னதாக நடிகர் குமரன் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டிருந்த போது, அவருடன் இணைந்து பணியாற்றிய சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் குமரனுக்கு 33 வயது. இந்நிலையில் நடிகர் குமரனின் பிறந்தநாளை கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள், குமாரனுக்காக ஒரு காமன் டிபியை வலைதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். ரசிகர்களின் காமன் டிபியை கவனித்த குமரன், ரசிகர்களுக்கு நன்றி கூறி நெகிழ்ச்சியான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here